1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (19:11 IST)

சுரங்கம் அமைத்து கடைக்குள் புகுந்து கவரிங் நகைகளை அள்ளிச் சென்ற திருடன்

தஞ்சாவூர் அருகே நகைக் கடையை கொள்ளையடிக்க, சுரங்கம் அமைத்து உள்ளே புகுந்த திருடன் தங்கம் என்று நினைத்து கவரிங் நகைகளை அள்ளி சென்றுள்ளார்.
 
தஞ்சாவூர் அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஷீத்தல் குமார் சோப்ரா. இவர் திருக்காட்டுப்பள்ளி–கண்டியூர் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார்.
 
அந்த நகைக் கடையின் சுவரில் சுரங்கம் அமைத்து புகுந்த கொள்ளையர் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
 
கடையின் அருகே சுரங்கம் அமைக்கப் பயன்படுத்திய மண்வெட்டி, துளையிடும் கருவி, கார்ஜாக்கி ஆகியவை கிடந்தன. இது குறித்து கடை உரிமையாளர் திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
 
இடதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள், மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் வந்து, அங்கு ஆய்வு நடத்தினர். கை ரேகைகளை பதிவு செய்தனர்.
 
அந்த நகைக்கடை கடையில், சி.சி.டி. கேமிரா பொருத்தப்பட்டிருந்தது. அதனை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது அதில் ஜட்டி மற்றும் பனியன் அணிந்த ஒருவர் சுரங்கம் அமைத்து கடைக்குள் நுழைந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஆய்வு செய்தபோது, கொள்ளை போனது கடையில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.2 ஆயிரம் என்பது குறிப்பது குறிப்பிடத்தக்கது.