செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 ஜூன் 2020 (16:06 IST)

ஜெபம் பண்ணுங்கோ... கொரோனாவை விரட்ட ஜீயர் பலே ஐடியா!!

மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் கொரோனா தானாக ஓடிவிடும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
 
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். பேட்டில் அவர் பேசியதாவது, கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட வேண்டும். ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும் என்றார்.
 
மேலும் 108 முறை ஓம் நமோ நாராயநாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள் தேவையில்லை கொரோனா தானாக ஓடிவிடும் என்றும் கொரோனாவை விரட்ட ஐடியா கொடுத்துள்ளார்.