’பொறாமை ’குறித்து டாக்டர் .ராமதாஸ் ’டுவிட் மழை’... ஸ்டாலினுக்கு பதிலடியா...? அறிவுரையா...?

ramadoss
Last Modified புதன், 20 பிப்ரவரி 2019 (18:26 IST)
அதிமுக கூட்டணியில் பாஜக - பாமக ஆகியக் கட்சிகள் இணைவது வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் நேற்று காலையில்  அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. இந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கி, அவர்களுடைய 10 கோரிக்கைகளையும் ஏற்றுள்ளதாகத் தெரிவித்தது. அதையடுத்து சில மணி நேரங்களில் பாஜகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடித்து 5 தொகுதிகளைக் கொடுத்து டீலை முடித்தது அதிமுக.
இந்நிலையில் அதிமுக - பாமக கட்சி கூட்டணி  குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.நேற்று வேலூர் அருகே ஆம்பூரில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில்  ஸ்டாலின் பேசியதாவது:
 
பணத்துக்காக இணைந்துள்ள கூட்டணிதான் அதிமுக - பாமக இடையேயான கூட்டணி ஆகும்.மக்களின் நலனுக்காக இல்லாமல் பணத்துக்காக சேர்ந்துள்ள கூட்டணி அது.ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வத்தை விமர்சித்தவர் ராமதாஸ். அதிமுகவின் கதை என்ற பெயரில் அரசை விமர்சித்து அண்மையில்தான் புத்தகம் வெளியிட்டவர் அதே கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். 
stalin
7 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் மட்டுமின்றி வேறு எதோகூட இதன் பின்னணியில்  உள்ளது. தமிழக மக்களைப் பற்றி கவலைப்படாமல் பணத்துக்காக அதிமுகவுடன் கூட்டணி  அமைத்துள்ளதாக  அதிமுகவுடான பாமகவின் கூட்டணி பற்றி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் தெரிவித்தார்.
 
இந்நிலையில் ஸ்டாலின் கூறிய விமர்சனத்துக்கு ராம்தாஸ் இது குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் தற்பொழுது தன் டுவிட்டர் பக்கத்தில் பொறாமை குறித்த ’பல நாட்டு அறிஞர்களின் டுவிட்களை தனது டுவிட்டர் பக்கத்தில்  மழையாய் பொழிந்துவருகிறார்.’
ramadoss
இந்த அறிவுரைகளை தனது டுவிட் மூலம் யாருக்குச் சொல்ல வருகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பும் வேளையில்... நேற்று அதிமுக - பாமக கூட்டணி பற்றி ஸ்டாலின்  தெரிவித்த காரசாரமான  விமர்சனதுக்கான பதிலடியாகக்கூட ’இந்த அறிவுரைகள் ’இருக்கலாம்  எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.'இந்த டுவிட்டுகளுக்கு  லைக்குகள் விழுந்து கொண்டிருப்பதுதான் பெரிய ஹைலைட்.' 
ramadossஇதில் மேலும் படிக்கவும் :