டிவி-யில் செய்திகளை பார்க்கும் முதல்வர் ஜெயலலிதா: நாளை மறுநாள் தனி வார்டுக்கு மாற்றம்?
டிவி-யில் செய்திகளை பார்க்கும் முதல்வர் ஜெயலலிதா: நாளை மறுநாள் தனி வார்டுக்கு மாற்றம்?
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முனேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும். நாட்டு நடப்புகளை அவரது அறையில் உள்ள டிவி மூலமாக அவர் பார்ப்பதாகவும், நாளை மறுநாள் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
கடந்த 56 நாட்களாக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் படிப்படியாக குணமடைந்த வருகிறார். அவரது டிஸ்சார்ஜ் தேதியை அவரே முடிவு செய்வார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
இதனையடுத்து அவர் எப்போது வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் உள்ளது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் தற்போது உள்ள அறையில் நாட்டு நடப்புகளை டிவி செய்திகள் மூலமாக பார்த்து வருவதாகவும், அவர் நாளை மறுநாள் தனி வார்டுக்கு மாற்றப்பட உள்ளார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
மேலும் முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரத்திற்குள் வீடு திரும்புவார் என்ற தகவலும் வருகிறது. மருத்துவமனைக்கு ஜோதிடர் ஒருவர் வந்ததாகவும் அவர் ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் குறித்து சசிகலாவிடம் அரை மணி நேரம் விவாதித்ததாக செய்திகள் வருகிறது.