1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By கே.என்.வடிவேல்
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (20:54 IST)

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு தேதி - தொடரும் சஸ்பென்ஸ் - ஏகிறும் டென்சன்

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தீர்ப்பு தேதி தள்ளிக் கொண்டே செல்வதால், தமிழக அமைச்சர்களும், அதிமுகவினரும் கடும் டென்சனில் உள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மற்றும்  சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீிதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, குற்றவாளிகள் தரப்புக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ 100 கோடி அபராமுதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
 
இதனால், இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கர்நாடக நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் பவானி சிங்கின் நியமனத்தை தமிழக அரசே நியமனம் செய்ததால், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில், பவானி சிங் நியமனம் குறித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பவானி சிங்கின் நியமனம் செல்லாது என்று பரபரப்பு தீர்ப்பளித்தனர்.
 
அந்தத் தீர்ப்பிலேயே, இந்த வழக்கை தொடுத்த திமுக பொதுச் செயலர் பேராசிரியர் அன்பழகனின் எழுத்து பூர்வமான வாதங்களையும், கர்நாடாக அரசின் எழுத்துப் பூர்வமான வாதங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பவானிசிங் வைத்த வாதங்களை ஏற்றுக் கொள்ள தேவையில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.      
 
இந்த வாதங்களை கணக்கில் கொண்டு, நன்கு பரிசீலித்த பிறகே தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி குமாரசாமி நீதி மன்றத்திற்கு உத்தரவிட்டனர்.
 
இந்த உத்தரவின்படி, கர்நாடக உயர் நீதி மன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் 81 பக்கம் மனுவும், கர்நாடக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா 18 பக்க எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்தனர்.
 
தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு ஆறுதலாக இருக்குமா அல்லது அவரது எதிர்காலத்தை மீண்டும் புரட்டிப் போடும் வகையில் இருக்குமா என மில்லியன் டாலர் கேள்வி அதிமுக , திமுக தரப்பில் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பு தேதி குறித்து மே 8 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதிக்குள் நீதிபதி குமாரசாமி வெளியிடுவார் என கர்நாடாகவில் தகவல் பரவிவருகின்றது.
 
இந்த தகவல் உறுதியாகாத நிலையில், தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் கடும் டென்சனில் உலா வருகின்றனர்.
 
முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்துள்ள கூட்டுச்சதி குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என நால்வர் தரப்பிலும் கடந்த வாரம் தாக்கல் செய்த‌ மனு விசாரணைக்கு வந்தது.