Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (13:32 IST)
என்னை புதைத்த இடத்தில் நீ ஆட்சி செய்ய நினைக்கிறாயா?: அன்றே பேசிய ஜெயலலிதா(வீடியோ)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தற்போது முதல்வராக பதவியேற்க உள்ளார். சசிகலாவின் இந்த முடிவுக்கு தமிழக மக்கள் தரப்பில் அதிருப்தியே நிலவுகிறது. பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மட்டுமின்றி அனைவரும் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஜெயலலிதா பேசும் வசனம் ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.