1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (08:26 IST)

கன்னடக்காரினு சொல்ல மறுத்த தமிழ் பெண் ஜெயலலிதா: நடிகை லட்சுமி

தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகவும் தைரியமானவர். அவரது தைரியத்திற்கு உதாரணமா தான் ஒரு கன்னடக்காரினு சொல்ல மறுத்த சம்பவத்தை ஒருமுறை பகிர்ந்தார் நடிகை லட்சுமி.


 
 
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை லட்சுமியிடம் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என மூன்று முதலமைச்சர்களுடன் ஆரம்ப காலத்தில் திரைத் துறையில் சேர்ந்து பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசும் போது, ஜெயலலிதாவின் தைரியத்திற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக கூறினார்.
 
நான் கர்நாடகாவில் பிறந்த தமிழ்ப் பொண்ணு’னு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டிருந்தாங்க. அவ்வளவுதான்... கர்நாடகாவில் அவருக்கு எதிரா கொந்தளிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ கர்நாடகாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தாங்க.
 
பிரீமியர் ஸ்டுடியோவில் ஷூட்டிங். நிறையப் பேர் வந்து அவரை கேரோ பண்ணி, 'நான் கன்னடக்காரி’னு சொல்லு... கன்னடத்துல பேசு. இல்லாட்டி உன்னை இங்கே இருந்து போகவிட மாட்டோம்’னு மிரட்டினாங்க. ஆனா, ஜெயலலிதா சின்னதாகூட அசரலை.
 
சேர்ல கால் மேல் கால் போட்டு உக்கார்ந்துட்டு ரொம்ப கூலா சொன்னாங்க... 'அப்படி எல்லாம் சொல்ல முடியாது. நான் கர்நாடகாவில் பிறந்த தமிழ்ப் பொண்ணுதான். அதை நான் மாத்திச் சொல்ல முடியாது. கன்னடம், தமிழ், ஆங்கிலம் எதுவா இருந்தாலும் என் தேவைக்குத்தான் மொழி. தேவைக்கு ஏற்பதான் நான் பேசுவேன். உங்களுக்காக கன்னடம் பேச முடியாது’னு சொன்னார். கடைசியில  போலீஸ் வந்துதான் பஞ்சாயத்து முடிஞ்சது. அந்த தில், துணிச்சல் யாருக்கு வரும் என கூறினார் லட்சுமி.