வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (00:02 IST)

மாலைமுரசு அதிபர் ராமசந்திரன் பெயர் பலகையை திறந்து வைத்த ஜெயலலிதா

மாலைமுரசு அதிபர் ராமசந்திரன் பெயர் பலகையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 

 
தமிழக பத்திரிகை உலகில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற பணியாற்றியவர் மாலைமுரசு அதிபர் பா. இராமச்சந்திர ஆதித்தன். அவரது நினைவைப் போற்றும் வகையில் சிறப்பு செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சமீபத்தில் அறிவித்திருந்தார்.
 
மேலும், தனது தந்தை பா.இராமச்சந்திர ஆதித்தன் வசித்து வந்த அடையாறு காந்தி நகர், 4ஆவது பிரதான சாலைக்கு, அவரது பெயரை சூட்டிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், மாலை முரசு நாளிதழின் இயக்குநர் இரா.கண்ணன் ஆதித்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதனை ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, அடையாறு காந்தி நகர், 4ஆவது பிரதான சாலைக்கு பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை என பெயர் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.
 
இந்த நிலையில், பா.இராமச்சந்திர ஆதித்தனார் சாலை என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட சாலையின், பெயர்ப் பலகையை, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அவருக்கு தமிழ் பத்திரிக்கையாளர்கள் பலரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.