செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 5 மே 2018 (09:58 IST)

ஜெயலலிதா நினைவிடம் - மே 7-ல் அடிக்கல் நாட்டு விழா!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சல் காரணமாக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி ஜெயலலிதா சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திலேயே ரூ.50 கோடி செலவில் ,அவருக்கு நினைவிடம் அமைக்கவுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது.
 
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 7ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.