வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (04:50 IST)

ஜெயலலிதா வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்றவர்கள் கைது

மது விலக்கை அமல்படுத்தக் கோரி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டு முன்பு போராட்டம் நடத்த முயன்ற சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மிடாஸ் மதுபான தொழிற்சாலையை மூடக் கோரியும் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் கடந்த 7 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், மேற்கண்ட அதே கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப் போவதாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தினர் அறிவித்தனர்.
 
இதனையடுத்து, சென்னை, தி.நகர் தெற்கு போக் சாலையில் உள்ள சட்டப் பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் இருந்து, செந்தில் ஆறுமுகம், அண்ணாதுரை, ஜெய்கணேஷ், அயூப்கான், விஸ்வநாதன் உள்ளிட்ட சுமார் 25 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
 
தகவல் அறிந்த காவல்துறை அவர்களை அதே இடத்தில் வைத்து கைது செய்து, அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். பின்பு விடுதலை செய்யப்பட்டனர்.