Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா தாக்கப்பட்டு கீழே விழுந்தார், தாங்கி பிடிக்க கூட ஆள் இல்லை: மௌனத்தை கலைத்தார் பி.எச்.பாண்டியன்!

ஜெயலலிதா தாக்கப்பட்டு கீழே விழுந்தார், தாங்கி பிடிக்க கூட ஆள் இல்லை: மௌனத்தை கலைத்தார் பி.எச்.பாண்டியன்!


Caston| Last Updated: செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:08 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். பலரும் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

 
 
அவரது மரணம் குறித்த சந்தேகத்தை யாரும் தீர்க்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையின் விளக்கமும் திருப்தியாக இருக்கவில்லை. ஆனால் அவரது கூட இருந்த சசிகலா தரப்பில் அவரது மரணத்துக்கான எந்த விளக்கமும் இல்லாமல் முதல்வர் ஆவது எப்படி என்பதில் படு தீவிரமாக உள்ளனர். இது பலருக்கும் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது மௌனத்தை கலைத்துள்ளார். இந்த சந்திப்பின் போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் போயஸ் கார்டன் வீட்டில் தாக்கப்பட்டார் என்ற தகவலை கூறியுள்ளார்.
 
அதில், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. பிரச்னை முடிவில், கீழே விழுந்த ஜெயலலிதாவை தாங்கிபிடிக்க கூட யாரும் இல்லை. இந்த நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பி.எச்.பாண்டியன் கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :