வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 6 ஜூலை 2015 (12:31 IST)

ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக மேல்முறையீடு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து திமுக மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து, நீதிபதி சி.ஆர். குமாரசாமி அளித்த தீர்ப்பில் பல்வேறு அடிப்படை தவறுகளும், கணித பிழைகளும் இருப்பதாக வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா  உள்பட 4 பேரை விடுத்து கர்நாடக  உயர்நீதிமன்றம் கடந்த மே 11ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசு கடந்த ஜூன் மாதம் 23 அன்று மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
 
இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பாக மேல்முறையீட்டு மனுவை இன்று  தாக்கல் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் வழக்கறிஞர் வி.ஜி பிரகாசம் மேல்முறையீட்டு மனுவை அளித்தார்.