Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ. இருந்திருந்தால் அவரை இப்படி விமர்சித்திருப்பாரா நாஞ்சில் சம்பத்! (வீடியோ இணைப்பு)

ஜெ. இருந்திருந்தால் அவரை இப்படி விமர்சித்திருப்பாரா நாஞ்சில் சம்பத்! (வீடியோ இணைப்பு)


Caston| Last Modified ஞாயிறு, 14 மே 2017 (17:34 IST)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பண்பு இருந்தும் அவருக்கு அதனை ஆற்ற தெரியவில்லை எனவும் அவர் செய்தது தவறு எனவும் அதிமுக சசிகலா ஆதரவு அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

 
 
மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவில் கொள்கைப்பரப்பு துணைச் செயலாளர் பதவியும், இன்னோவா காரையும் கொடுத்து சிறப்பித்தார் ஜெயலலிதா.
 
சென்னை மழை வெள்ளத்துக்கு பின்னர் நாஞ்சில் சம்பத் அளித்த ஒரு பேட்டியால் அவர் மீது நடவடிக்கை எடுத்தார் ஜெயலலிதா. இதனால் அவர் கட்சியில் ஓரம்கட்டப்பட்டார். இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் பேசிய நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா தவறு செய்தார் என பேசியுள்ளார்.

 

நன்றி: தந்தி டிவி
 
ஜெயலலிதா இரண்டு முறை முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்க வேண்டிய சூழல் வந்தபோது, அந்த பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கினார். இதனை நாஞ்சில் சம்பத் தற்போது விமர்சித்துள்ளார்.
 
ஜெயலலிதா அப்படி ஓபிஎஸ்ஸை முதல்வராக நியமித்தது நிச்சயமாக தவறு எனவும், சசிகலாவை தேர்ந்தெடுத்திருந்தால் இப்படி பிரச்சனை வந்திருக்காது என நாஞ்சில் சம்பத் கூறினார். மேலும் ஜெயலலிதாவுக்கு பண்பு இருந்தும் அதனை அவரால் ஆற்ற முடியவில்லை எனவும் கூறினார்.
 
ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற வார்த்தைகளை நாஞ்சில் சம்பத் விட்டுருப்பாரா என்ற சந்தேகம் பலருக்கும் எழுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :