Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சூடுபிடிக்கும் ஜெ. மரண விசாரணை: பொறுப்பேற்றார் ஆறுமுகசாமி!

சூடுபிடிக்கும் ஜெ. மரண விசாரணை: பொறுப்பேற்றார் ஆறுமுகசாமி!

சனி, 30 செப்டம்பர் 2017 (12:52 IST)

Widgets Magazine

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஆறுமுகசாமி.


 
 
அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்த போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு எந்த பதிலும் கொடுக்காமல் இருந்தது. எனவே, இரு அணிகளும் நீண்ட நாட்கள் இணையாமலே இருந்தது.
 
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என எடப்பாடி தரப்பு அறிவித்தது. மேலும், கட்சியிலிருந்து தினகரனையும் விலக்கி வைத்தது. அதனையடுத்து, இரு அணிகளும் ஒன்றாக இணைந்தது.
 
ஆனால், இது நடந்து ஒன்றரை மாதங்களாகியும் விசாரணைக் கமிஷனை எடப்பாடி அரசு நியமிக்கவில்லை. இதுபற்றி  திமுக செயல் தலைவர் நேற்று கூட ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷன் விசாரிக்கும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
 
இந்நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சென்னை எழிலகத்தில் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக் கமிஷனின் தலைவராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது பொறுப்பேற்றுள்ள ஆறுமுகசாமி இன்னும் சில தினங்களில் அல்லது அக்டோபர் 3-ஆம் தேதி தனது விசாரணையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வருவதாக் ஜெயலலிதா மரணம் குறித்தான விசாரணை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

டெல்லிக்கு வித்யாசாகர் ராவ் கொடுத்த அதிர்ச்சி: புதிய ஆளுநர் நியமனத்தின் பின்னணி!

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தமிழகத்துக்கு முழு நேர ஆளுநர் இல்லாமல் பொறுப்பு ஆளுநராக ...

news

பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 25 வயது வாலிபர்: 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது வீட்டுக்கு அருகில் உள்ள ...

news

அருண் ஜெட்லியின் பதவி நான் விட்டுக்கொடுத்தது: சின்ஹா அதிரடி!!

முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தற்போதைய நித் அமைச்சர் அருண் ஜெட்லியை கடுமையாக ...

news

கொரிய தீபகற்பத்தில் போர்பதற்றம்; வடகொரிய எல்லையில் ரஷ்ய ராணுவம் குவிப்பு!!

ரஷ்யா மற்றும் வடகொரியாவிற்கு இடையே அமைந்துள்ள ஹசன் பகுதியில் ரஷ்ய ராணுவத்தினர் ...

Widgets Magazine Widgets Magazine