வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 27 செப்டம்பர் 2014 (15:17 IST)

சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கத்துடன் திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. எனவே, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீடு, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
இது குறித்து திமுக பொது செயலாளர் அன்பழகன் கூறும்போது, "திமுக தலைமை தமிழக காவல்துறையிடம் கேட்டுக்கொண்டதன்படி தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.
 
இதனிடையே போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா வீட்டருகே 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் குவிந்து தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர்கள் சுப்பிரமணியன் சுவாமி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் போஸ்டர்களை கிழித்தெரிந்தனர்.