வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 28 மே 2015 (00:08 IST)

ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு செய்ய திமுக -தேமுதிகவிற்கு உரிமை உள்ளது - சொல்வது சரத்குமார்

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், தேமுதிக மேல்முறையீடு செய்துள்ளது. திமுக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதாக சரத்குமார் கருத்து  தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கோவையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 
 
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பலர் விரும்பி வந்து எங்கள் கட்சியில் இணைகிறனர். இதில் இருந்தே எங்கள் கொள்கைகள் மக்களுக்கு பிடித்தமான கொள்கைகள் எனலாம்.
 
நான் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். காரணம், கட்சிக்கு நிதி தேவை. அதை பெறுவதற்கு மாவட்டம் மாவட்டடமாக செல்கிறேன். அந்த வகையில் தற்போது கோவை வந்துள்ளேன். அடுத்து திருப்பூர், சேலம் செல்ல உள்ளேன்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என அதிமுகவினரின் வேண்டுதல் பலித்துள்ளது. இதனால்தான் அந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையடைந்துள்ளரா்.
 
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பல்வேறு தடைகளை தாண்டி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதனால் நான் மட்டும் அல்ல, தமிழகமே மிகவும் மழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் நலனில் ஜெயலலிதாவை வேறு யாரும் அதிக அளவு அக்கறை செயலுத்த முடியாது.
 
ஆனால், ஜெயலலிதா விடுதலையானதை எதிர்த்து தேமுதிக மேல்முறையீடு செய்துள்ளது. திமுக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.
 
மேல்முறையீடுகளை கண்டு ஜெயலலிதா அஞ்ச மாட்டார். எதிர்க்கட்சிகள் மேல்முறையீடு செய்தாலும் அதை திறம்படஎதிர் கொண்டு வெற்றி பெறுவார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா தான் வெற்றி பெறுவார் .
 
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் கூறுகிறது. இதை நான் வரவேற்கிறேன். ஆனால், வருவாய்க்கு  மாற்று ஏற்பாடு செய்து விட்டு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து என்றார்.