1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (20:03 IST)

’ஜெயலலிதா மக்கள் சந்திக்க முடியாத முதல்வராக உள்ளார்’ - மேதா பட்கர்

மக்கள் எளிதில் சந்திக்க முடியாத முதல்வராக ஜெயலலிதா இருக்கிறார் என்று சமூக சேவகி மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.
 
சமூக சேவர் மேதா பட்கர், நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து சென்னையில் தமிழக கவர்னர் ரோசைய்யாவை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், ’தமிழகத்தில் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்கள் பெருமளவில் அரசால் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அளித்த சமூக சேவர் மேதா பட்கர், ’ஜெயலலிதா மக்கள் எளிதில் சந்திக்க முடியாத முதல்வராக இருக்கிறார். மற்ற மாநிலங்களில் மக்கள், முதல்வரை நேரடியாக சந்தித்து தங்களின் குறைகளை கூற முடிகிறது. தமிழகத்தில் அது முடியாத காரியமாக உள்ளது’ என்றார்.
 
மேலும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு ஆதரிக்கக் கூடாது என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதுவதாக கவர்னர் உறுதி அளித்துள்ளதாகவும் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.