1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (10:37 IST)

சுவாதி படுகொலை: அனல் கக்கிய ஜெயலலிதா!

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி மர்ம நபர் ஒருவரால் காலை 6.30 மணியளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பொது மக்கள் அதிகம் கூடம் ஒரு இடத்தில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


 
 
இதனையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்து எதிர்கட்சிகள் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து நிலை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது என முதல்வர் கூறுவது தவறு என விமர்சிக்கப்பட்டு வருகிறது.
 
இதனையடுத்து சுவாதி படுகொலை மற்றும் மற்ற கொலை சம்பவங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் முதல்வர் ஜெயலலிதா கொந்தளித்ததாக கூறப்படுகிறது.
 
நேற்று காலை தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், உளவுப் பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, டி.ஜி.பி. அசோக்குமார் ஆகியோரை வரவழைத்து நன்றாக டோஸ் கொடுத்து அனுப்பியிருக்கிறார் என பேசப்படுகிறது.
 
காவல் துறை அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், கொலை கொள்ளை இல்லாத நாளே இல்லை, என்ன நடந்திட்டு இருக்கு சிட்டில. சட்டம் ஒழுங்கு சரி இல்லைன்னு எதிர்கட்சிகள் அறிக்கை விடுறாங்க எதுக்கும் பதில் சொல்ல முடியல.
 
கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்திட்டே இருக்கு. இவ்வளவு காவலர்கள் இருந்தும் என்ன பிரயோஜனம்? யாரும் எந்த வேலையையும் உருப்படியாக செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.
 
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் ஒரு பெண்ணைக் கொலை செய்திருக்காங்க. அந்தக் குற்றவாளியை இன்னும் பிடிக்க முடியல, அப்புறம் என்ன பண்றீங்க என கொதித்துப்போனாராம் ஜெயலலிதா.
 
அதற்கு பவ்வியமாக பதில் சொன்ன கமிஷ்னரிடம், நான் உங்ககிட்ட காரணம் கேட்கல. ஏன் இப்படி நடக்குது? ஏன் தடுக்க முடியல. குற்றவாளிகளைப் பிடிக்க முடியலையான்னு கேட்கிறேன்.
 
அந்தக் குற்றவாளியை இன்னும் இரண்டு நாட்களுக்குள் பிடிக்கணும். திரும்பவும் இப்படி ஏதாவது நடந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என காவல் துறை அதிகாரிகளை காய்ச்சி எடுத்து விட்டாராம் முதல்வர் என பேசப்படுகிறது.