Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தலைமை ஏற்க வாருங்கள்.. சசிகலாவை அழைத்த அம்மா....


Murugan| Last Updated: திங்கள், 26 டிசம்பர் 2016 (17:23 IST)
தமிழக முன்னாள் முதவ்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், அதிமுகவை அவரின் தோழி சசிகலா தலைமையேற்று நடத்த வேண்டும் என் அதிமுகவினர் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

 
கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் என தினமும் பலர் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து, கட்சிக்கு தலைமையேற்று நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று காலை ஏராளமான அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டன் சென்றனர். அதில் சிலர், எம்.ஜி.ஆர், அப்துல் கலாம், சுபாஷ் சந்திர போஸ், முத்து ராமலிங்க தேவர் போன்று வேடம் அணிந்து இருந்தனர். 
 
குறிப்பாக, ஒரு பெண் ஜெயலலிதாவை போல், பச்சை உடை மற்றும் கண்ணாடி அணிந்து வந்திருந்தார். அவர்கள் அனைவரும் சசிகலாவிடம் சென்று தலைமை ஏற்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
 
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 
 


இதில் மேலும் படிக்கவும் :