வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 டிசம்பர் 2016 (10:51 IST)

எனக்கு பின்னால் அதிமுக? : ஜெ.வின் கணீர் குரல் திரும்புமா?

உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் மரணமடைந்தார்.


 

 
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் சட்டசபையில்  பேசிய பேச்சை ஏராளமானோர் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 
அதிமுகவை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. எனக்கு பின்னாலும், நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக இயங்கும் என்ற அவர் பேசிய பேச்சு அப்போதே வைரலாக பலராலும் பரப்பப்பட்டது.
 
அந்த வீடியோ தற்போது பலரும் பதிவிட்டு, இந்த கணீர் குரல் இனி திரும்புமா என்று கேள்வி எழுப்பி தங்கள் உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.