1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : சனி, 18 அக்டோபர் 2014 (16:30 IST)

21 நாள் சிறைவாசம் முடிந்தது; ஜெயலலிதா விடுதலை ஆனார்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்து, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அவரது 21 நாள் சிறைவாசம் முடிவுக்கு வந்தது.

பெங்களூரில் இருந்து விமானம் மூலம் அவர் உடனடியாகச் சென்னைக்குத் திரும்புகிறார்.
 
முன்னதாக, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல், சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
ஜெயலலிதாவுக்குச் சிறை வளாகத்திலும் வழி நெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுக்குக் கையசைத்தபடி, ஜெயலலிதா பயணித்தார். அவர் எச்.ஏ.எல். விமான நிலையத்தைச் சென்றடைந்து, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்பட்டார்.

சிறை வளாகத்திலும் விமான நிலையம் செல்லும் வழியிலும் அவருக்குச் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சென்னையில் தொடர்ந்து மழை பெய்யும் நிலையிலும் விமான நிலையத்திலிருந்து போயஸ் கார்டன் வரை, தொண்டர்கள் அவரை வரவேற்கக் காத்திருக்கின்றனர்.