1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 24 மே 2015 (19:17 IST)

201 புதிய அம்மா உணவகங்கள் திறப்பு - 5 கோப்புகளில் ஜெயலலிதா கையெழுத்து

ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டு 201 புதிய அம்மா உணவகங்களை திறந்து வைத்ததோடு புதிய திட்டங்களுக்கான கோப்புகளிலும் கையெழுத்திட்டார்.
 

 
ஜெயலலிதா இன்று ஞாயிற்றுக் கிழமை [24.05.2015] 5ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது காணொளி புதிய அம்மா உணவங்களை திறந்து வைத்தார். பின்னர் காவல் துறையினருக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். மேலும் புதிய திட்டங்களுக்கான 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
 
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், ”சென்னை மாநகராட்சியில் 45 அம்மா உணவகங்கள், கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் 4 அம்மா உணவகங்கள், தமிழகம் முழுவதும் உள்ள 124 நகராட்சிகளில் 128 அம்மா உணவகங்கள், மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் 23 அம்மா உணவகங்கள், என மொத்தம் 201 அம்மா உணவகங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.