சசிகலாவால் ஓரங்கட்டப்பட்ட ஜெயலலிதா : அதிர்ச்சியில் அதிமுகவினர்


Murugan| Last Modified வெள்ளி, 6 ஜனவரி 2017 (16:16 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் லெட்டர் பேடு ஜெ.வின் ஆதரவாளர்களை அதிர்ச்சிக்கு  உள்ளாக்கியிருக்கிறது.

 

 
எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்த நாள், நூற்றாண்டு விழாவாக அதிமுகவினரால் கொண்டாடப்படவுள்ளது. அதையொட்டி எம்.ஜி.ஆரின் உருவப்படம் பொதிந்த சிறப்பு நாணயங்களை வெளியிடுமாறு பிரதமர் மோடிக்கு, சசிகலா கடிதம் எழுதியுள்ளார். இது அவர் மோடிக்கும் அனுப்பும் முதல் கடிதமாகும். 
 
அந்த கடிதம் அதிமுக கட்சியின் பெயரில் உள்ள லெட்டர் பேடில் அச்சடிக்கப்பட்டுள்ளது. விவகாரம் என்னவெனில், அதில் கடிதத்தின் வலது புறம் சசிகலாவின் பெயர் பெரிதாகவும், இடது புறத்தில் ஜெயலலிதாவின் பெயர் சிறியதாவும் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது ஜெ.வின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :