வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 29 ஜனவரி 2015 (19:30 IST)

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான டைரியை கேட்ட நீதிபதி

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான டைரி எங்கே? என அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், இன்று நடந்த விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் டைரி மற்றும் சாட்சி ஆவணங்கள் முழுமையாக இல்லை. இந்த வழக்கு தொடர்பான டைரி எங்கே போனது? என கேள்வி எழுப்பினார்.
 
மேலும், விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடுவை ஆஜராக சொல்லுமாறும் அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி ஆணையிட்டார்.