Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அம்ருதா ஜெ.வின் மகள்தான் - ஜெ.வின் தோழி கீதா பரபரப்பு பேட்டி

Last Modified வெள்ளி, 1 டிசம்பர் 2017 (09:59 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள்தான் அம்ருதா என ஜெ.வின் நீண்ட நாள் தோழி கீதா பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.


 
தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி சென்னையில் வசிக்கும் ஜெ.வின் தோழி கீதா கருத்து தெரிவித்துள்ளார். ஜெ. மரணடைந்த போது, அதில் மர்மம் இருப்பதாகவும், அவரை சசிகலா குடும்பம்தான் கொலை செய்துவிட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் கீதா என்பது குறிப்பிடத்தக்கது.


 
அம்ருதா பற்றி அவர் கருத்துக் கூறிய போது “ஜெயலலிதாவிற்கும், சோபன் பாபுவிற்கும்  பிறந்த குழந்தைதான் அம்ருதா. இது சசிகலாவிற்கும் தெரியும். அம்ருதாவிற்கு போயஸ் கார்டனில் என்னவெல்லாம் நடந்தது என்பது டி.என்.ஏ சோதனை நடத்தினால் மட்டுமே தெரியவரும்..
 
சொத்து, பணத்திற்கு ஆசைப்பட்டு அம்ருதா அதைக் கூறவில்லை. ஜெ.வின் மகள் என்கிற உரிமையே போதும் என நினைக்கிறார். அவர் கூறுவது உண்மை என நிரூபணம் ஆனால் தமிழக அரசியலில் பெரும் மாற்றமே வரும்” எனக் கூறியுள்ளார்.
 
இவரின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :