வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ashok
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (13:17 IST)

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதற்கு கர்நாடக அரசு காரணம் – மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி தமிழகத்திற்க்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை உடனடியாக கார்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஆண்டு தோறும்  தமிழகத்தில் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடி என்பதால் காவிரியிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு கர்நாடக அரசு 94 டிஎம்சி தண்ணீர்க்கு பதிலாக வெறும் 64 டிஎம்சி தண்ணீரை மட்டுமே காவிரியில் திறந்துவிட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.. கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை காவிரியில் திறந்து விடாததால், மேட்டூரின் அணயில் நீர் இல்லாமல் தண்ணீர் திறக்கப்படவில்லை.இதனால், குறுவை சாகுபடி இந்த ஆண்டு செய்ய முடியாமல், தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய மீதமுள்ள 27.557 டிஎம்சி தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.