பெரும் படையோடு வரும் ஜெயக்குமார்? ஓ.பி.எஸ்.க்குதான் எங்கள் ஆதரவு
அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர் கொண்ட பெரும் படையை திரட்டிக்க் கொண்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்க வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சசிகலா பக்கம் இருந்த அதிமுக மூத்த தலைவர்கள் பெரும்பாலும் தற்போது ஓ.பி.எஸ். அணியில் உள்ளனர். தற்போது வரை அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா அணியில் உள்ளார்.
இந்நிலையில் அவர் சுமார் 10 சட்டமன்ற உறுப்பினர் கொண்ட குழுவை திரட்டிக்கொண்டு ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு அளிக்க வந்துக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.