வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மே 2024 (13:51 IST)

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எழுதிய 2வது கடிதம் சிக்கியது.. கடிதத்தில் உள்ள அதிர்ச்சி தகவல்..!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த சில நாட்களாக காணாமல் போயிருந்த நிலையில் நேற்று அவரது உடல் எறிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் அவர் எழுதியதாக கடிதம் ஒன்று நேற்று கைப்பற்றப்பட்ட நிலையில் அதில் காங்கிரஸ் கட்சியை நிர்வாகிகள் மேல் குற்றம் காட்டப்பட்டிருந்தது என்பது சம்பந்தப்பட்டவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எழுதிய இரண்டாவது கடிதம் தற்போது கிடைத்துள்ளது. தனது மருமகள் ஜெபாவிற்கு ஜெயக்குமார் எழுதிய கடைசி கடிதம் ஆன இந்த கடிதத்தில் அவர் யார் யாரிடம் எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
 நேற்று ரூபி மனோகரன், தங்கபாலு ஆகிய இருவரும் முதல் கடிதத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இன்று வெளியான இரண்டாவது கடிதத்திலும் அவர்கள் இருவரும் மீதும் ஜெயக்குமார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆகிய இருவரும் மீதும் மீண்டும் குற்றம் சாட்டி தனது மருமகளுக்கு ஜெயக்குமார் கடிதம் எழுதிய நிலையில் தனது பிரச்சனையை வைத்து கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள யாரையும் பழிவாங்க வேண்டாம் என்றும் ஜெயக்குமார் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது
 
Edited by Siva