செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (11:23 IST)

தமிழன், தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகிவிடுவாரா? ஜெயகுமார் கேள்வி!

தமிழன் தமிழன் என்று சொன்னால் மட்டும் ராகுல்காந்தி தமிழன் ஆகி விடுவாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
நேற்று பாராளுமன்றத்தில் தமிழ்நாடு குறித்தும் தமிழ்நாட்டு மக்கள் குறித்தும் ஆவேசமாக ராகுல்காந்தி பேசியது இன்றும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக தமிழ்நாட்டை பாஜக எந்த காலத்திலும் ஆட்சி செய்ய முடியாது என ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழன் தமிழன் என்று சொன்னால் ராகுல்காந்தி தமிழன் ஆகி விடுவாரா?  அதற்கு முகாந்திரமே இல்லை என்று கூறிய ஜெயக்குமார் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததல் அதை மறைக்க திமுக மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயக்குமாரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.