வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 8 மார்ச் 2023 (12:47 IST)

அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்க வேண்டும்: ஜெயகுமார்

Jayakumar
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவதை அண்ணாமலை பக்குவத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக அதிமுகவில் உள்ள பிரபலங்கள் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் மற்றும் ஐடி விங் செயலாளராக இருந்த திலிப் கண்ணன் ஆகிய இருவரும் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் 
 
இதனால் அதிமுக பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. இது குறித்து அண்ணாமலை காரசாரமாக பேட்டி அளித்து வந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 
 
அப்போது அவர் கூறிய போது பாஜகவில் இருந்து யாரும் அதிமுகவில் சேர வேண்டும் என்று இழுக்கவில்லை என்றும் அதிமுகவில் அவர்களாகவே  வந்து சேருகிறார்கள் என்றும் அவ்வாறு அதிமுகவில் இணைவதை பக்குவத்தோடு அண்ணாமலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.
 
Edited by Mahendran