அதிமுகவை கமல் எதிர்த்தால் மூன்றாம் பிறை கிளைமேக்ஸ்தான் - அமைச்சர் திமிர் பேச்சு


Murugan| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (13:39 IST)
ஆட்சி பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறி வரும் விமர்சனம் பற்றி  அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
தமிழக அரசின் எல்லா துறைகளிலும் ஊழல் தலை விரித்தாடுகிறது என நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்தனர். ஆனாலும், கமல்ஹாசன் தொடர்ந்து அதிமுக அரசை விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “ அதிமுகவை எதிர்த்து கமல்ஹாசன் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தால் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் நடக்கும். எத்தனை ஸ்டாலின், கமல் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது” என அவர் கருத்து தெரிவித்தார்.
 
அதாவது, இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் இறுதியில் பைத்தியம் பிடித்து அலைவார் என்கிற ரீதியில் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :