1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2015 (04:43 IST)

துக்ளக் சோ - ஜெயலலிதா சந்திப்பு: ஜெயா டிவி ஊழியர் சிறையில் அடைப்பு

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவை, தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய வீடியோ காட்சியை வாட்ஸ் அப்பில் உலவ விட்ட ஜெயா டி.வி. எடிட்டரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 

 
கடந்த சில நாட்களாக, உடல் நலக்குறைவால், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முக்கியக் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவை  மருத்துவ மனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த செய்தியும், போட்டோவும் பல்வேறு பத்திரிக்கைகளில் வெளியானது. 
 
ஆனால், யாரும் எதிர்பார வகையில், சோ மற்றும் முதல்வர் ஜெயலலிதா இருவரும் மருத்துவமனையில் சந்தித்து பேசிய வீடியோ காட்சி வாட்ஸ்அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதனையடுத்து, சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை முடிவில், ஜெயா டிவியில் விஷுவல் எடிட்டராக பணியாற்றி வரும் புலி என்று கூறப்படும் சக்திவேல் தான், முதல்வர் ஜெயலலிதா- சோ சந்திப்பு ஆறுதல் கூறும் வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 
 
ஜெயா டிவி எடிட்டர் கைது செய்யப்பட்டது மீடியா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.