வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 31 ஜனவரி 2017 (10:21 IST)

உங்கள் அபிமான ஜெயா டிவி இனிமேல் சசி டிவி?

உங்கள் அபிமான ஜெயா டிவி இனிமேல் சசி டிவி?

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி சேனல் வைத்து நடத்துவது வழக்கமான ஒன்று. தங்கள் கட்சி மற்றும் தலைவர்கள் சார்ந்த செய்திகளை ஒளிபரப்புவது. தங்கள் கட்சியின் புகழ் பாடுவதையும் எதிர் கட்சிகளை வசைபாடுவதையும் குறிக்கோளாக வைத்திருப்பார்கள்.


 
 
தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தங்களுக்கு என்று செய்தி சேனல்களை வைத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜே. ஜே டிவி ஒன்றைத் துவங்கினார். அதன் பிறகு அந்த சேனல் மூடப்பட்டு ஜெயா டிவி தொடங்கப்பட்டது.
 
ஜெயலலிதா மற்றும் அதிமுகவின் சிறப்புகளை பரப்புவதை முழுநேர பணியாக செய்யும் அந்த சேனல் தற்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் புகழை பாடி வருகிறது.
 
ஜெயலலிதா இறந்ததும் சசிகலா தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெயா டிவி தற்போது ஜெயா டிவி என்ற பெயரை மாற்றி சசி டிவி என வைக்க உள்ளதாக ஒரு குபீர் செய்தி வருகிறது.
 
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜெயா டிவி சசி டிவியாக மாறுகிறது என தகவல் வருகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்பதால் இந்த செய்தி எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.