திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (11:09 IST)

பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது: ஜவாஹிருல்லா பேட்டி

பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார் 
 
அதிமுக மற்றும் பாஜக இடையே தற்போது கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டியளித்தபோது பாஜகவின் கடும் அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது என்று தெரிவித்தார். 
 
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து பிரிவார்கள் என்ற கூறுவது வெறும் நாடகம்தான் என்றும் பாஜகவின் பிடியிலிருந்து அதிமுகவால் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran