ஜனவரி 12 முதல் 17 வரை முன்பதிவு செய்த டிக்கெட் செல்லாது
ஜனவரி 12 முதல் 17 வரை ரெட் பஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ரெட் பஸ் ஆப் மூலம் ஜனவரி 12 முதல் ஜனவரி 17 வரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் செல்லாது என்று ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து பேருந்துகளை தவிர்த்து தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்படும் முக்கிய இணையதளமாக விளங்குவது ரெட் பஸ் இணையதளம். இந்நிலையில் ஆம்னி பேருந்து சங்கத்தின் அறிவிப்பு அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட் பஸ் இணையதளம் மூலம் ஜனவரி 12 முதல் 17 வரை பயணம் செய்ய வாங்கிய டிக்கெட்டுகள் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் திருப்பி கொடுத்து பணத்தை பெற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் இணையதளங்கள் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.