1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 24 ஜனவரி 2017 (11:11 IST)

கலவரம் செய்தது இளைஞர்களா? போலீசா?: வீடியோ ஆதாரங்கள் உள்ளே!

கலவரம் செய்தது இளைஞர்களா? போலீசா?: வீடியோ ஆதாரங்கள் உள்ளே!

தமிழகமே நேற்று அதிர்ந்தது 7 நாட்களாக அறவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் கலவரமாக முடிந்ததை நினைத்து. மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என சரமாரியாக போலீசாரால் தாக்கப்பட்டனர். ரத்தம் வழிந்தவாறே அலறினர் மாணவிகள்.


 
 
இந்த போராட்டத்தை அறவழியில் நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளனர் இளைஞர்கள். ஆனால் அந்த போராட்டத்தை கலவரமாக முடித்துள்ளனர் காவல்துறையினர். மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. ஆனல் மாணவர்கள் ஈடுபடவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
ஒரு சில சமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவி கலவரத்தில் ஈடுபட்டனர் என கூறப்பட்டது. சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தில் ஈடுபட்டனர் என ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நேற்று போலீசார் சரியாக நடந்து கொண்டார்களா என்பதே பலரதும் கருத்து.
 
நேற்று போலீசார் நடந்துகொண்ட விதம் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அவர்களின் அராஜகம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோக்களை பார்த்தால் கலவரத்தில் ஈடுபட்டது யார் என்ற சந்தேகம் வரலாம். அதனை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
 
கீழே உள்ள கொடுக்கப்பட்டுள்ளது வீடியோ தொடர்புகள்: