வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 21 ஜனவரி 2017 (20:31 IST)

வெளியே அனுமதிக்காத காவல்துறையினரை உள்ளே விட மறுக்கும் மக்கள்

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டுவந்ததைத் தொடர்ந்து நாளை ஜல்லிக்கட்டு நடைப்பெறும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த சென்ற மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.


 

 
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பித்த பின் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைப்பெறும் என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
 
இந்நிலையில் மெரீனாவில் போராடி வரும் போராட்டக்காரர்கள், எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம், ஜல்லிக்கட்டு மீதான முழுமையான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். முழுமையாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.
 
இதையடுத்து வாடிவாசலில் மக்கள் மதுரை ஆட்சியர் மற்றும் காவல்துறையினரை உள்ளே அனுமதிக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நிரந்தர சட்டம் பிறப்பிக்கும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்றும், நாளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.