வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2016 (13:03 IST)

ஜல்லிக்கட்டு விவகாரம்: சீமான் கைது

மதுரையில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. எனவே, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் பண்டிகை முடிந்தது.
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
 
இதனால், மதுரை மாவட்டத்தில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பாலமேட்டில் காளைகளை அவிழ்த்து விடும் வாடி வாசல் பகுதியிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரைக்கு வந்தார்.
 
அதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த காவல்துறையினர் சீமானை தடுத்து நிறுத்தினர்.
 
அப்போது, காவல்துறையினரிடம் பேசிய சீமான், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால்தான் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
 
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தங்கள் அமைப்பின் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 20 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறினார்.
 
இந்நிலையில், மதுரை அருகே உள்ள பாசிங்காபுரம் பகுதியில் அவரது காரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேருடன் சேர்த்து சீமானையும் கைது செய்தனர்.