வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:05 IST)

குண்டு வீச தயாராகிவிட்டார் ஜெ.தீபா; மாலையில் செய்தியாளர் சந்திப்பு: அடுத்தடுத்து நிகழும் அதிரடி திருப்பங்கள்!

குண்டு வீச தயாராகிவிட்டார் ஜெ.தீபா; மாலையில் செய்தியாளர் சந்திப்பு: அடுத்தடுத்து நிகழும் அதிரடி திருப்பங்கள்!

தமிழக அரசியல் களம் கொளுந்துவிட்டு எரிகிறது. அந்த அளவுக்கு பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று பிற்பகல் 3 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து புதிய அணுகுண்டை வீச தயாராகி விட்டதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆனார். தற்போது பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துவிட்டார், சசிகலா கட்சியின் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்க ஆளுநரின் வருகைக்கு காத்துக்கொண்டு இருக்கிறார். இப்படி தொடர் பரபரப்புடன் சென்றுகொண்டிருக்கும் தமிழக அரசியல் களம் மேலும் பல அதிரடி திருப்பங்களை கண்டு வருகிறது.
 
இந்நிலையில் திடீரென உச்ச நீதிமன்றம் சசிகலாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வரும் என அறிவித்தது. தமிழகம் முழுவதும் சசிகலா முதல்வர் ஆவதற்கான எதிர்ப்புகள் பலமாக வருகிறது. தமிழகம் வரவேண்டிய ஆளுநர், டெல்லி, மும்பை என பயணத்தில் பிசியாக இருக்கிறார்.
 
இந்நிலையில் சசிகலா முதல்வர் ஆவதை தடுக்க, குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி விரைகிறார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த சூழலில் அதிமுக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அணல் பறந்தது. அடுக்கடுக்காக சசிகலா மீது குற்றச்சாட்டுகளை வைத்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்தார் பி.எச்.பாண்டியன். இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்கும் முன்னர் இன்று மாலை 3 மணி அளவில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
பி.எச்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த பின்னர் தற்போது ஜெ.தீபா செய்தியாளர்களை சந்திக்க இருப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஜெ.தீபா ஏதாவது புதிய குண்டை சசிகலாவுக்கு எதிராக போடலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.