வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 2 மார்ச் 2019 (11:07 IST)

’சின்னப் பசங்க பண்ற வேலையா இது ...? ஓடும் ரயிலில் நடந்த விபரீதம்! திக்..திக்..

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை செல்லும் பயணிகள் நேற்று காலைவேளையில் திருவொற்றியூர் அண்ணாமலை நகர்  ரெயில்வே கேட் பகுதியில் சிக்னலுக்காக ஊர்ந்து சென்று கொண்டிருந்தது ரயில்.
அந்த நேரத்தில் தண்டவாளத்தில் அருகே நின்று கொண்டிருந்த சில சிறுவர்கள் ரெயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்தனர். அதில் ஒருவரான ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமா சிவா என்பவரின்(27) கட்டையால் அடித்து அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர்.
 
செல்போனை பறிகொடுத்த  ராமா சிவா கையில் பலத்த காயமடைந்தார். சிறுவர்கள் கம்பியால் தாக்கியதில்  நிலைதடுமாறி ரெயில் சக்கரத்தில் அவரது கால் சிக்கி துண்டானது. 
 
இதனால் வலி தாங்க முடியாமல் பலமாக அலறிக் கூச்சலிட்டார். உடனே அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர்.
 
தற்போது ராமா சிவாவுக்கு மருத்துவர்கள்  தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல் வெளியாகிறது.
 
மேலும் ராமாவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்களை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.