Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உண்மையிலேயே ராதிகாவை மாட்டிவிட்டது சரத்குமார் தான்: விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

உண்மையிலேயே ராதிகாவை மாட்டிவிட்டது சரத்குமார் தான்: விசாரணைக்கு ஆஜராக சம்மன்!

புதன், 12 ஏப்ரல் 2017 (12:14 IST)

Widgets Magazine

கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.


 
 
ஆர்கே நகர் தொகுதியில் தினகரனை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டு மறுநாள் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல இருந்த நேரத்தில் இந்த அதிரடி சோதனை நடந்தது. இதனால் இது அரசியல் காரணத்துக்காக நடத்தப்பட்ட சோதனை என ஆளும் கட்சியால் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தை வைத்து சரத்குமாரை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது வருமான வரித்துறை. விடிய விடிய சரத்குமாரிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது ஆர்கே நகர் தேர்தலின் போதும் அதற்கு முன்னரும் சரத்குமார் எடுத்த முன்னுக்கு பின்னர் முரணான அரசியல் முடிவுகளுக்கு பின்னணியில் உள்ள ஆதயம் குறித்து வருமான வரித்துறை கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
 
ஆனால் இதற்கு சரத்குமார் சரியாக பதில் அளிக்காததால் வருமான வரித்துறை, தினகரனிடம் வாங்கிய 5 கோடியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வாங்கிய 2 கோடியும் எங்கே வைத்திருக்கிறீர்கள் என நேரடியாகவே கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் இதற்கு பதில் அளித்த சரத்குமார், வேறு வழியில்லாமல் அந்த 5 கோடி ரேடான் நிறுவனத்தில் வந்த லாபம் எனவும் 2 கோடி ஒரு தயாரிப்பாளர் நண்பரிடம் வாங்கிய கடன் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து தான் வருமான வரித்துறை ராதிகாவின் ரேடான் நிறுவனத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தியது.
 
சரத்குமார் மாட்டியதில்லாமல், தன்னையும் மாட்டிவிட்டதாக அப்செட் ஆன ராதிகா சரத்திடம் தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராதிகாவையும் விசாரணைக்கு ஆஜராக வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

விஜயபாஸ்கர் வாயை திறந்தால்? - அச்சத்தில் அதிமுக அமைச்சர்கள்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வரும் ...

news

கமிஷன் வேண்டும் இல்லையெனில் பகலில் மட்டுமே பெட்ரோல் பங்க்: டீலர்கள் கரார்!!

பெட்ரோல், டீசல் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கமிஷனை உயர்த்த வேண்டும் என மூன்று ...

news

தீபாவை விவாகரத்து செய்யும் மாதவன்?: முற்றியது மோதல்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை அவரது கணவர் மாதவன் பிரியப்போவதாகவும், விரைவில் விவாகரத்து ...

news

4வது மாடியில் இருந்து தவறி விழுந்த நபர்: அதிர்ச்சி வீடியோ!!

குடியிருப்பு பகுதி 4வது மாடியில் இருந்து ஒரு நபர் தவறி விழுந்த வீடியோ காட்சி வெளியாகி ...

Widgets Magazine Widgets Magazine