Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விஜயபாஸ்கரின் 100 ஏக்கர் நிலம், சொத்துக்கள் முடக்கம் - வருமானத்துறை அதிரடி

Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:13 IST)

Widgets Magazine

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமானத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


 

 
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவது தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட சிலரின் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ரூ.5 கோடி பணமும், ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு ரூ.89 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் சிக்கியது. 
 
இதனையடுத்து, அது தொடர்பாக விஜயபாஸ்கர், சரத்குமார் உள்ளிட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் சென்று கடந்த சில நாட்களாக விளக்கம் அளித்தனர். 
 
அந்நிலையில், விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என புகார் எழுந்தது. விஜயபாஸ்கரை அழைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தியதாகவும், ஆனால், அதற்கு விஜயபாஸ்கர் மறுத்து விட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியானது.
 
அதன்பின், விஜயபாஸ்கர், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். 
 
இந்நிலையில், அவரின் சொந்த ஊரான திருவேங்கைவாசலில் உள்ள அவரது 100 ஏக்கர் நிலம் மற்றும் குவாரிகளை முடக்குமாறு, புதுக்கோட்டை மாவட்ட நில பதிவாளருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். எனவே, விரைவில் அவரது சொத்துக்கள்  முடக்கப்படும் எனத் தெரிகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

திருநங்கைகள் சேலை அணிய கூடாது: மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!

திருநங்கைகள் சேலை அணியக் கூடாது எனவும் அவர்கள் ஆண்களை போல பேண்ட் சட்டை அணிய வேண்டும் என ...

news

சசிகலா சீராய்வு மனு நாளை விசாரணை: மீண்டும் சிறையா? இல்லை போயஸ் கார்டனா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் ...

news

189 கொலை செய்த பெண் சைக்கோ: அமெரிக்காவில் பரபரப்பு!!

அமெரிக்காவில் 189 கொலைகளுடன் தொடர்புடைய 39 வயதான சைக்கோ பெண் ஒருவரை போலிசார் கைது ...

news

பொதுச்செயலாளர் ஆகிறார் ஓ.பி.எஸ்? - தினகரனுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட ...

Widgets Magazine Widgets Magazine