Widgets Magazine
திங்கள், 20 நவம்பர் 2017

Widgets Magazine

இது எங்கள் 100வது ரெய்டு - விவேக் வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்


Murugan| Last Modified புதன், 15 நவம்பர் 2017 (16:06 IST)
வருமான வரித்துறையினர் விவேக் வீட்டில் சோதனை நடத்திய போது கேக் வெட்டி கொண்டாடியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
>  
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில், ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது.  >  
இதில், இளவரசியின் மகன் விவேக்  மற்றும் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீட்டில் மட்டும் அதிகாரிகள் 5 நாட்கள் தொடர்ந்து சோதனை நடத்தினர். விவேக் வீட்டில் இரவு பகல் என விடாமல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  ‘இது  எங்கள் 100வது ரெய்டு’ எனக்கூறி வருமான வரித்துறைகள் கேக் வெட்டி கொண்டாடினார்களாம்.

 

இதில் மேலும் படிக்கவும் :