1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (17:55 IST)

குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம்தான்” -டெல்லி உயர் நீதிமன்றம்

குழந்தை ஆணா,  பெண்ணா என்ற பாலினத்தை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம் தான் என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆண் குழந்தை இல்லை எனக் கூறி ஒரு கணவரின் குடும்பத்தினர், பெண்ணை கொடுமைப்படுத்திய நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த   நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது.

ஆண் வாரிசு இல்லாததால் மருமகளை கொடுப்பபடுத்துவதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம்,  பாலினத்தை முடிவு செய்வது ஆணின் குரோமோசோம் தான் என்று டெல்லி  உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.