1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 நவம்பர் 2021 (09:20 IST)

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

தமிழகத்தில் சில மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு, அண்ணா நகர் மதுரவாயில், பாரிமுனை, அண்ணா சாலை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. 
 
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், கேளம்பாக்கம், மறைமலை நகர், தாம்பரம், சேலையூர், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, ஆவடி, செங்குன்றம் , காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் , திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, சேத்பட் டு, போளூர், ஆரணி,செய்யாறு, செங்கம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி,திண்டிவனம் , கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், திருக்கோவிலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.