1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2015 (15:36 IST)

தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காதது குற்றமல்ல - முன்னாள் நீதிபதி சந்துரு

தேசிய கீதம் பாடமறுப்பதோ, பாடும்போது எழுந்து நிற்க மறுப்பதோ குற்றச்செயல் அல்ல ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் கே சந்துரு தெரிவித்துள்ளார்.
 

 
சமீபத்தில், இந்தியாவில் திரையரங்கு ஒன்றில் தேசிய கீதம் பாடப்பட்டுக்கொண்டு இருக்கும்போது எழுந்து நிற்க மறுத்த ஒரு குடும்பத்தினரை, மற்றவர்கள் திரையரங்கிலிருந்து வெளியேற்றியதாக காணொளி ஒன்று வெளியாகியது.
 
இதனால், தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நிற்பது சட்டரீதியாக கட்டாயமானதா என்ற கேள்வியை பலரது மனதில் எழுப்பியிருக்கிறது.
 
இந்த சர்ச்சை குறித்து பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே சந்துரு தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காதது குற்றமல்ல என்று கூறினார்.
 
கேரள பள்ளி மாணவன் தேசிய கீதம் பாட மறுத்தது தொடர்பான வழக்கு ஒன்றில் இந்திய உச்சநீதிமன்றம் இது குறித்து ஏற்கனவே விளக்கமளித்திருப்பதாக தெரிவித்த சந்துரு, தேசிய கீதம் பாடமறுப்பதோ, பாடும்போது எழுந்து நிற்க மறுப்பதோ குற்றச்செயல் அல்ல என்றும் வலியுறுத்தினார்.
 
மேலும் அவர் கூறுகையில், “1961ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய-சீனா யுத்தத்திற்குப் பிறகுதான் எல்லைப் பிரச்சனை வந்தபொழுது திரையரங்களில் இறுதியில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று அரசு உத்தரவு போட்டது.
 
அதேபோல, பள்ளிக்கூடங்களில் பொது பிரார்தனை நடக்கும்போது, தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால், பல திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பதற்கு முன்பாகவே மக்கள், எழுந்து சென்றார்கள். இதனால் தேசியகீதத்திற்கு கவுரவம் கிடைப்பதற்கு பதில் அகவுர்மே ஏற்படுகிறது” என்றார்.
 
இதுதவிர, அமெரிக்காவில் ஜோசஃப் மெக்கார்த்தி காலகட்டத்தில் கப்யூனிஸ்டுகளை எல்லாம் ஒழித்தது போன்று, இங்கேயும் கருத்து ரீதியான தாக்குதல்கள் நடத்தக்கூடாது என்றும் தேசியகீதத்தை அவமதிக்க கூடாதே ஒழிய, முனுமுனுக்காதது குறித்து எல்லாம் கேள்வி கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அவருடைய உரையை இங்கே கேட்கலாம் :