ராம மோகன் ராவ் சிக்கியதற்கு சேகர் ரெட்டியின் வாக்குமூலம் தான் காரணமா?


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:25 IST)
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் சிபிஐ மற்றும் வருமான வருத்துறையினர் நடத்திய சோதனைக்கு, தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வாக்குமூலம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

 

வருமான வரித்துறையினர் கடந்த 8ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள தொழிலதிபரும், ஒப்பந்தக்காரருமான சேகர் ரெட்டி வீடு மற்றும் அண்ணாநகரில் உள்ள அவரது அலுவலகங்களில் அதிரடி சோதனை செய்தனர்.

இதில் ரூ. 131 கோடி ரொக்கமும், 178 கிலோ தங்கமும் பிடிபட்டது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 30 கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும் அடங்கும்.

அதன்பேரில் சேகர் ரெட்டியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, தமிழக அரசிடம் தமக்குள்ள செல்வாக்கு பற்றியும், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் உள்ளிட்டோருடன் தனக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் சேகர்ரெட்டி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே தற்போது தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் இல்லம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலக அறை ஆகியவற்றை குறிவைத்து, வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :