Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராம மோகனராவ் தற்கொலை முயற்சி?: விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு?

ராம மோகனராவ் தற்கொலை முயற்சி?: விசாரணைக்கு பயந்து விபரீத முடிவு?


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (13:30 IST)
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் உடல் நலக்குறைவால் நள்ளிரவில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வருகின்றன.

 
 
சில தினங்களுக்கு முன்னர் ராம மோகனராவ் வீடு மற்றும் அவரது மகன் வீடு தலமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை போன்றவற்றில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த சோதனை.
 
இதில் பணம், தங்கம், சொத்து ஆவணங்கள் மற்ற சில ஆவணங்கள் என பல கைப்பற்றப்பட்டன. இவற்றை வைத்து அமலாக்கப் பிரிவும் அவரிடம் விசாரணை நடத்த இருந்தது. சிபிஐயும் ராம மோகனராவை கைது செய்யும் சூழல் இருந்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று ராம மோகனராவை விசாரணைக்கு வருமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் போகவில்லை. இதனையடுத்து நேற்று அவர் விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அதிர்ஷ்டவசமாக அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கூறவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :