1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 மார்ச் 2024 (11:12 IST)

தாமரை சின்னத்தில் போட்டியிட்டா கூட்டணிக்கு ஓ.கே? ஓபிஎஸ்க்கு நிர்பந்தம்?

மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை பாஜக சின்னத்தில் போட்டியிட பாஜக கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையேயான தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. பாஜக கூட்டணியில் பல்வேறு கட்சிகளும் இணைய ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஓபிஎஸ் அணியினரும் தாங்கள் தொடர்ந்து பாஜக கூட்டணியிலேயே உள்ளதாகவும், கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக அல்ல, எடப்பாடி பழனிசாமிதான் என கூறி வருகிறார்.

ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி ஓபிஎஸ் அதிமுகவின் கட்சிக் கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தனது கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டால் அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என திட்டமிடுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.


இதற்காக பாஜக – ஓபிஎஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், தற்போது ஓபிஎஸ்க்கு தேர்தல் சின்னம் இல்லாததால் பாஜகவின் சின்னத்திலேயே அவரும், அவரது ஆதரவாளர்களும் போட்டியிட சம்மதித்தால் கூட்டணிக்கு சம்மதம் என்றும் டீலிங் பேசி வருவதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

பாஜக கூட்டணியில் அமமுக இணைய உள்ளதாக ஏற்கனவே பேச்சுகள் எழுந்துள்ள நிலையில் அவர்களோடு சமீபத்தில் சுமூகமான உறவை பேணி வரும் ஓபிஎஸ் அணியும் பாஜக கூட்டணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K