புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 2 நவம்பர் 2018 (07:58 IST)

மு,க.ஸ்டாலின், டிடிவி தினகரன் ரகசிய சந்திப்பா? மேல்முறையீடு குறித்த மர்மம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் சமீபத்தில் நீதிமன்றத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முதலில் தினகரன் தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தது. பின்னர் திடீரென மேல்முறையீடு இல்லை என்றும் மக்கள் மன்றத்தை சந்திக்கவிருப்பதாகவும் தினகரன் அறிவித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் தினகரன் - மு.க.ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நடந்ததாகவும், இந்த சந்திப்புக்கு பின்னரே மேல்முறையீடு இல்லை என்ற முடிவை தினகரன் எடுத்துள்ளதாகவும் அதிமுக நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தியை அரசியல் நோக்கர்கள் மறுத்துள்ளனர். ஏற்கனவே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் 18 தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இனி மேல்முறையீடு சென்றால் மேலும் ஆறு மாதங்களோ அல்லது ஒருவருடமோ அந்த வழக்கு இழுக்கும். அந்த வழக்கிலும் யாருக்கு வெற்றி என்பதை உறுதிபட கூற முடியாது. எனவே உடனடியாக தேர்தலை சந்திப்பதே சிறந்த முடிவு என்ற எண்ணத்தில் தினகரன் முடிவெடுத்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலுடன் தான் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், அதுவரை இன்னும் 6 மாதங்கள் 20 தொகுதிகளிலும் எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலையே தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.